தொடவே தொடாதே மதுவை கவிஞர் இரா இரவி

தொடவே தொடாதே மதுவை!
கவிஞர் இரா. இரவி
தொடவே தொடாதே கொடிய மதுவை
தொட்டால் உன்னை விடவே விடாது!
மதுவைத் தொட்டவரெல்லாம் மண்ணாகி விட்டனர்
மண்ணாகிப் போகாமல் இருக்க தொடாதே!
இன்றைக்கு மட்டும் என்றுசொல்லி தொடங்குவர்
என்றைக்கும் என்றாகி என்றுமே வருந்துவர்!
ஆறறிவு மனிதனை அய்ந்தறிவாக்கி விடும்
அற்பணிக்கி உந்தன் வாழ்வை சிதைத்துவிடும்!
உன்மீதுள்ள மதிப்பை எல்லாம் கெடுத்துவிடும்
உன்னைக் காண்போர் வெறுக்கும் நிலை வரும்!
எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அழித்துவிடும்
இன்னலில் ஆழ்த்தி தாழ்த்தி வருத்திவிடும்!
நண்பன் சொன்னார் என்று நீ குடிக்காதே
நண்பனையும் குடிக்காதே என்று சொல்லி திருத்து!
காந்தம் உன்னை கவர்ந்து இழுக்கும்
குடிக்கு அடிமையானால் மீள்வது கடினமாகும்!
நரம்பு தளர்ச்சி நோய்கள் யாவும் வரும்
நல்லநடை தளர்ந்து தள்ளாட வைத்துவிடும்!
தேசப்பிதா காந்தியடிகள் அன்றே உரைத்தார்
தேசத்தில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்றார்!
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்டது
தடுக்கி விழுந்தால் எழ முடியாது வீழ்த்திவிடும்!
குடியிலிருந்து விலகி இருப்பதே அறிவுடைமை
குடிக்கு அடிமையாகி சிரழிவது மடமை!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Jan-22, 8:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 63

மேலே