காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 12

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 12

பாகம் பனிரெண்டு
==================

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளைச் செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். இளமதி டீம் மிரட்டப்பட்டதாய் சாருமதிக்கு மேகலா தெரிவித்தாள். அப்போது பல புது விஷயங்களை வருண் கூறினான். மீண்டும் காட்டுக்கு அவர்கள் கிளம்பினர். வருண் சொன்னதையெல்லாம் செய்தியாக சாருமதி வீடியோ செய்து அனுப்பியிருந்தாள். ஆனந்த அதிர்ச்சி அனைவருக்கும். அதே வைரல் செய்தி அடுத்து நாடு முழுவதும் ஒளிபரப்பாக இன்னும் பரபரப்பானது நாடு. இங்கே காட்டில் ஒரு மரம் விழுந்து வருணுக்கும், அவனது நண்பர்களுக்கும் காயமானது. இதில் வருணுக்குத்தான் பலத்த அடி. அவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்றனர். அடுத்து நடந்தது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)

உடனடியாக வருணை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுடன் சில நண்பர்களையும் விட்டு வந்தனர். உடனே அவனது வீட்டிற்கு இந்த விஷயம் தெரிவிக்கப் பட அனைவருமே ஆஸ்பெட்டலுக்கு வந்தனர்.

கண்ணீருடன் தான் வந்தனர் நான்கு பேரும்..

"டாக்டர்.. டாக்டர்.. வருணுக்கு"

"பெரிய பிரச்சனை எதுவுமில்லைங்க.. முதலுதவி கொடுத்திருக்கோம். ரெண்டு மூனு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்து சிகிச்சை எடுத்துக்கிட்டா போதும்"

"அப்ப ரொம்ப மகிழ்ச்சி டாக்டர்.."

எல்லோரும் நார்மல் மூடுக்கு வந்தனர்.

உடனே பிருந்தா தன் அம்மாவிடம் அணத்த ஆரம்பித்தாள்..

"அம்மா.. அம்மா.."

"என்னடி?"

"நானே இங்க தங்கி இருந்து வருணப் பார்த்துக்கவா?"

"அடியே இவளே... அடிவாங்கப்போற எங்கிட்ட.. அவனோட அப்பா, அம்மா இருக்காங்க.. ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்க சிறப்பா பார்த்துப்பாங்க.. வந்தோமா பார்த்தோமானு கெளம்பு.. நமக்கும் வீட்டுல வேலை இருக்கு... இவ்ளோ பசங்க கூட இருக்கும் போது நமக்கு என்னடி கவலை.? அப்பறம் பசங்கெல்லாம் இங்க இருக்கும் போது உன்னால எப்படி தங்க முடியும்.. டெய்லி ஒரு தடவ வந்து பார்த்துக்கலாம் வா.."

"ம்.. சரிமா.. எப்படியும் நீ ஒத்துக்க மாட்டேனு தெரியும்.. சும்மா கேட்டுப்பார்த்தேன்"

"சரி சரி.. வாய மூடிட்டு அமைதியா நில்லு"

தினமும் அவனை அங்கு சென்று பார்த்து வந்தனர். வலியெல்லாம் சரியாகி கொஞ்சம் தெளிவானதும் தனது நண்பர்களுடன் தொடர்ந்து போனில் சில விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தான் வருண்.

ஒரு நாள் ப்ளூகிராஸ் டீம் கூட இவனைப் பார்க்க வந்தது. நீலாவதி தனது தம்பிக்கு ஏற்பட்ட வலியாய் இதை உணர்ந்து மிகவும் வருத்தப்பட்டாள்.

"வருண்.. சீக்கிரம் உனக்கு குணமாகிடும்.. கவலைப்படாத"

"இவ்ளோ அன்பா ன அக்காவெல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை? அன்னைக்கே வருவீங்கனு எதிர்பார்த்தேன்.."

"அன்னைக்கு ஒரு மரமில்ல.. பல இடங்கள்ல இப்படி மரம் விழுந்திருக்கும் போல. எக்கச்சக்க விலங்குகளுக்கு அடி.. அதான் அந்தச் சிகிச்சையில ரொம்ப பிஸியாகிட்டேன்.. வீட்டுக்குப் போகறதுக்குள்ள நல்லா இருட்டிடுச்சு.. அதான் கெளம்பிட்டேன்.."

"இட்ஸ் ஓகே கா..."

வருணும் அவனது நண்பர்களும் நீலாவதியிடம் வாக்கி டாக்கியை எப்படி இயக்குவது என பயிற்சி பெற்றதோடு மட்டுமல்லாமல், சில வாக்கி டாக்கிகளை வாங்கி தங்களது நண்பர் வட்டத்துக்குள் பேசிக்கொள்ளவும் பயன்படுத்தி வந்தனர்.

வருணும் மிகுந்த பாசத்தோடு நீலாவதியிடம் பேசினான்.

==

இளமதி தொலைக்காட்சியின் காட்டுத்தீ அப்டேட், கஞ்சா அப்டேட்டெல்லாம் பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை மிகவும் கவர, அவர்கள் சாருமதிக்கு போன் செய்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு சாருமதிக்கு புகழ்மாலை சூடினர்.

எல்லோரும் இன்பத்தில் திளைத்திருக்க மீண்டுமொரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நிகழ்ந்தது.

(தொடரும்)

அ.வேளாங்கண்ணி

==

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 11:06 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 50

மேலே