அவளது புன்னகை கதம்பம்

கதம்பம்
**********
சலசலக்கும் அருவி
நடனம் ஆடுகிறது
கரையில் மயில்
(ஹைக்கூ)
*
கைப்பிடித்துக் கொண்டதும்
கைவிட்டுச் செல்கிறார்கள்
கல்யாண மணவறை.
(சென்ரியு)
*
பழைய மூக்குத்தி
இன்னும் மங்காமல்
அவளது புன்னகை.
(சென்ரியு)
*
கைப்பற்றியக் கள்ள நோட்டு
மாயம் தெரியாமல் மறையச் செய்கிறது
கைப்பற்றிய நல்ல நோட்டு
(லிமரைக்கூ )
*
ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்
சாதாரணக் காற்றில் தும்மினாலும்
பரவும் கொரோனா
(பழமொன்றியு)
*
ஊற்றெடுக்கும் உச்சிமலை நீரு
உருண்டோடி நடைபோட ஆறு
நாற்றமுற்ற மானிடரை
நாளெல்லாம் குளிப்பாட்டிச்
சீற்றமுடன் கடல்கலக்கும் பாரு
(குறும்பா)
*
நான் இரவாய் இருளும் பொழுது
நீ நிலவாய் ஒளிர்ந்து செல்கிறாய்
நான் பகலாய் புலரும் பொழுது
நீ மலராய் விரிந்து கொள்கிறாய்
(கஸல்)
*
செதுக்கியக் கல்லை
சிலையாக வணங்கும் நாம்
செதுக்கியச் சிற்பியைச்
சீர்தூக்க மறந்தே விட்டோம்
(தன்முனைக் கவிதை)
*
கண்வழித் தோன்றிக் கருத்தொன்றுங் காதலில்
பெண்மனம் மாறின் பிணக்கு.
*
தெய்வமிலை யென்றே திடமாகச் சொன்னபின்
செய்யுவதோ தெய்வச் சிலை.
(குறள் வெண்பாக்கள்)
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jan-22, 1:17 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 166

மேலே