பொறுப்பு

பொறுப்பு.

வீட்டு வாசலில்
நின்றிடுவேன்,
போவோர் வருவோரை
பார்த்திடுவேன்.

அதில் ஒருத்தி,
அவளொரு பேரழகி!
என்னைப் பார்த்து
சிரித்திடுவாள்,
என் முகம்
மலர்ந்து விடும்.

அக்கம் பக்கம்
பார்த்து விட,
அறைந்தாளே!
அறையாத அம்மாவும்,
அடித்தாரே!
அடியாத அப்பாவும்.

நான் செய்தது
தப்பு தப்பு,
தம்பி தங்கைகள்
எனக்கு உண்டு,
அப்பா அம்மா
அடித்தது சரி சரி.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (16-Jan-22, 7:54 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : poruppu
பார்வை : 70

மேலே