உங்களுக்கும் தெரியும்

இதயத்தின் இசை
மனித இனத்தின் உணர்ச்சிகளில்
முதன்மையானது,
உலகத்தின் பொது மொழி
தொலைக்காதவரை அந்த இடம்
சொர்க்கமாகும்

அறுசுவையை விட
இனிய சுவையானது,
மனித உணர்வின்
மென்மையான வெளிப்பாடு,
இதற்கு ஈடாக உலகில்
எதுவுமில்லை

இதனுடைய செயலால்
மன அழுத்தம் குறையும்
இறுக்கமான சூழ்நிலையும்
விலகிப் போகும்,
உடலின் தசைகளுக்கு
புத்துணர்ச்சி தரும்—இது
உங்களுக்கும் தெரியும்

எழுதியவர் : கோ. கணபதி. (25-Jan-22, 11:48 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : ungalukkum theriyum
பார்வை : 39

மேலே