வியக்க வைத்திடும் ஒப்பந்த பணி
சாலை போட்டார்கள் தரமானதாய்
முன்பு எப்போதும் இல்லா வகையில்
ஓரத்தில் நீண்டதாய் வெள்ளைக் கோடோடு
நகரத்தின் உள்பிரிவு தெருக்களில்
ஆறு நாட்கள் கடந்தபின் சாலையில்
ஆங்காங்கே இயந்திரத்தால் பள்ளங்கள்
ஆழமாய் தோண்டினார்கள் கழிநீருக்காம்
ஆச்சரியமாய் அவர்களிடம் வினவினேன்
சாலை போடும் முன்பே தோண்டாதது ஏனோ என கேட்டதற்கு கூறிய பதில்
அரசின் முறையே இப்படி தானென்று
அறங்காக்கும் எவரும் இவ்வாறு செய்யார்
புலால் விற்கும் கடையோரும் எள்ளளவேணும்
கடைபிடிப்பர் தருமத்தை பணஞ்சேர்க்க
அரசியல்வாதிகளும் அரசும் இணைந்து செய்யும்
திட்டம் யாவும் செல்லுதே அழிவை நோக்கி.
---- நன்னாடன்.