பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா - இன்னா நாற்பது 38
இன்னிசை வெண்பா
பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. 38
- இன்னா நாற்பது
பொருளுரை:
பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் தொடரக் கருதும் அறிவின்மை துன்பம் தரும்;
வீரமில்லாத அரசர் போர்க்களம் செல்வதும் துன்பம் தரும்;
விரைந்து செல்லும் வேகமுடைய குதிரையின் சேணம் இல்லாத முதுகில் ஏறிப் பயணம் செல்வதும் துன்பம் தரும்;
செய்யும் கூறுபாடறியாத அறிவிலி செய்யுங் காரியமும் துன்பம் தரும்.
திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை.