அதிசய காதல்

அதிசய காதல்
=============
அவள் வாழ்க்கை அவள் கண்டு அவளுக்காக வாழ
அவன் வாழ்வை அவன் பார்த்து
அவனுக்காக வாழ
தன் வாழ்வை தனக்காக வாழாமல்
தனியே தவிக்கிறதே அவர்கள் கொண்ட ஆத்மார்த்த காதல்
*
அவர்கள் தண்டவாளங்களாய்
தனித்தனியே பிரிந்த போதும்
இன்னும் ரயிலாகவே அவர்கள் பின்னால்
ஓடிக் கொண்டிருக்கிறதே அந்தக் காதல்
*
அவளுக்காக அவளும் அவனுக்காக அவனும் இரு மணமேடைகளில் மாலை சூடிக்கொள்ள அவனையும் அவனையும் பிரிந்து கண்ணீர் அநாதையாய் வடிக்கிறதே அந்தக் காதல்
*
பிரிவு என்னும் பெருந்துயர் வண்டியிலேறி
அவர்கள் வெவ்வேறு திசைகளில் பயணிக்க
திருவிழாவில் தொதைந்துபோன குழந்தையாய்
திசைகளற்றுத் தவிக்கிறதே அந்த தெய்வீக காதல்
*
அவள் எவனுடைய வீட்டிலோ குத்துவிளக்கேற்ற,
அவன் வீட்டில் எவளோ ஒருத்தி குத்துவிளக்கேற்ற,
அந்தகாரத்தில் குத்துக் கல்லாட்டம் இருந்து அழுகிறதே அந்த அதிசய காதல்
*
* மெய்யன் நடராஜ்
27 - 01 - 2022

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Jan-22, 1:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : athisaya kaadhal
பார்வை : 180

மேலே