நெஞ்சமெங்கும் நிறைந்தவளே 555
***நெஞ்சமெங்கும் நிறைந்தவளே 555 ***
என்னுயிரே...
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த சாலையோரம்...
அதோ அமர்ந்து பேசிய
அந்த மணல் மேட்டிலும்...
இன்று நான் மட்டும் உன்
நினைவுகளின் துணையோடு...
ஈருடல் ஓர் உயிராய்
அந்த நாட்களில் நாம்...
நீயும் உணரவில்லை
நானும் உணரவில்லை...
நம் அன்பினை நம் பிரிவின்
உச்சத்தில்தான் நான் உணர்ந்தேன்...
நீ உணர்ந்தாயோ இல்லையோ
தெரியவில்லை இன்றுவரை...
உன் விரல் பிடித்து நடக்கும்
சந்தோசம் இனி கிடைக்குமா...
தினம் தினம்
சாலையோரத்தில்...
உன்னை நான் ரசிக்கும்
சந்தோசம் கிடைக்கிறது...
நீயோ என்னை பார்த்தும்
பார்காததும் போல்...
எதிர் சாலையில்
கடந்து செல்கிறாய்...
நீயும்
அன்பை உணர்ந்தாள்...
என்னெதிரே
வந்துவிடு தாமதிக்காமல்.....
***முதல் பூ பெ .மணி .....***