மெளனா
மெளனா....
சிரித்தே கொல்வது
உன் செயலென்றால் - அதை
வரித்தே மடிவது
என் பயனன்றோ...!
உன்னை எண்ணி
பெருமை பட்டிருக்கிறேன்.
பெரும் பாடும் பட்டிருக்கிறேன்.
பெளர்ணமி நிலவில்
நீயும்....நானும்
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
கரைத்து.....கரைந்து...
உயிரின் அணுவாய்..
அணுவின் உணர்வாய்
உலகில் நித்தியமாய்
இருந்திட துடிக்கிறேன்.
கை கூடுமா? - இல்லை
கை மீறுமா?