காசுமாலை வாங்கி வருவானோ
வஞ்சியவள் காதலன் அருகிருக்க,
நெஞ்சம்தனில் அவன் குடியிருக்க,
கவலையெல்லாம் காணாமல் பறந்தோடும்!
காதலன் பணிநிமித்தம் பலகாத தூரம் சென்றுவிட,
கவலையது உடன்வந்து கண்களிலே பற்றிக் கொள்ளும்!
நினைவெல்லாம் வந்து போகும் அவனை
நிந்தனைகள் செய்யச் சொல்லும்,
நேரில் வந்தால் நெஞ்சில் தலைவைத்து விம்மச் சொல்லும்!
கனவுதனில் வந்து செல்லும் அவன் முகமே,
விழித்தாலோ நெஞ்சினிலே நிறைந்திருப்பான்,
விரைந்து வரும் வேளையிலே என் மார்புக்கு
காசுமாலை வாங்கி வருவானோ!
- வ.க.கன்னியப்பன்
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து 1218 கனவுநிலையுரைத்தல்