கற்பதற்கு சென்றது குற்றமா
கற்பதற்கு சென்றது குற்றமா ?
மரணத்தின்
வாசலில் நின்று
கொண்டிருக்கிறார்கள்
வானில் மிளிறும்
நட்சத்திரங்களை
கண்டு இரசித்தவர்கள்
நட்சத்திரங்களாய்
பூமியில் விழுந்து
வெடிப்புடன் பிளந்து
உயிர்களை பறித்து
செல்வதை திகிலுடன்
பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
வேடிக்கையாய் விமானங்கள்
பறந்ததை இரசித்தவர்கள்
கண்டவுடன் உள்ளம்
பதறி உடல் நடுங்கி
சாவு எண்ணத்தில்
விழுந்து கதறுகிறார்கள்
தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தேசத்தில்
தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள்
ஒரு வேளை
உணவு அவனுக்கு
இன்று எட்டா கனவு
வா வாங்கி கொள்
யாரோ அழைக்க
வெளியே
வந்தவனோ
கண்
முன்
உடல் சிதறி
காணாமல் போகிறான்
இத்தனை கொடுமையும்
கற்பதற்காக சென்றது
காரணமா ?
கேள்விகள் கேட்கிறார்கள்
இந்த குழந்தைகள்
நம் பதிலை கேட்பதற்கு
அவர்கள்
இங்கு வரவேண்டும்
என்பதை தவிர
இதை பதிலாய்
சொல்ல
வார்த்தைகள் இல்லை
நம்மிடம்…!