சாருலதா அத்யாயம் 2
திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் சாருலதாவும் சித்தார்த்தனும். அதை கண்டும் காணாமலும் லதா "ஏன்னா இவங்க என் அம்மா மட்டும் இல்ல என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் என் குலதெய்வமும் இவங்கதான். அதனால வணங்கறது மட்டுமல்ல என் வாழ்க்கையை முழுசா ஒப்படைக்கிறேன்"என்று சொல்லி சாஷ்டாங்கமா அவள் காலில் விழுந்தாள். அவளை அப்படியே வாரி அணைத்த சாருலதா, எதற்குமே கலங்காத...ஒரு 'மெச்சூர்ட் உமனாக' இருந்தாலும் தரை தாரையாக கண்ணீர்விட்டு லதாவின் கன்னத்தில் மாறி...மாறி...முத்தமிட்டாள்.
"அம்மா ...நான் இனிமேல் உன்னை அம்மான்னு நெனைக்கபோறதில்லை. நீ எனக்கு ஒரு பெஸ்ட் பிரென்ட்... உற்ற தோழி. ஆமா. பொதுவா அம்மாங்களெல்லாம் கூட ரொம்ப செல்பிஷ். அவங்க பெத்த பிள்ளைங்களுக்கு மட்டும் ப்ரபிரென்ஸ் தருவாங்க. தாய்மை தெய்வத்தின் மறுபதிப்புன்னு சொல்றதை நானும் ஒத்துக்கிறேன். கண்டிப்பா தெய்வந்தான். சந்தேகமே இல்ல.ஆனா பூர்ண சந்திரன்ல எப்படி ஒரு கறை இருக்குதோ அத போல இவங்ககிட்ட இந்த செல்பிஷ்ங்கிற கறை இருக்குது. அதனால கொஞ்சம் மட்டு படுறாங்க. ஆனா ஒரு உண்மையான பிரென்ட் ...அவன் கெட்டவனா இருந்தாலும் சரி...நல்லவனா இருந்தாலும் சரி...எதற்காகவும் விட்டு கொடுக்காத, தோளோடு தோள் நிக்கிற அந்த பிரெண்ட்ஷிப்....அந்த மஹாபாரத கர்ணனைப்போல ...அம்மா நீ எனக்கு அம்மாவா மட்டுமில்லாம நல்ல பிரெண்டா இருமா ப்ளீஸ் " என்று நா தழுதழுக்க சொல்லி கண் கலங்கினாள்.
ஒன்றும் பேசாமல் அவளை அணைத்தபடி சித்தார்த்தனையையும் ஒரு பார்வை பார்த்தாள் சாருலதா.அங்கே மௌன நாடகம் ஒன்று அரங்கேறியது. 'பிரென்ட்...நான் காலேஜிக்கு போயிட்டு வரேன். என் பிரெண்ட்ஸுகளை பார்க்கணும் "என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் லதா.
சாருலதாவும் சித்தார்த்தனும் டைனிங் டேபிளில் எதிர் எதிரில்.ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.ஆனால் அவர்கள் இதையங்களோ லப்...டப், லப்...டப் என்று மாறி மாறி எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தன.
லண்டன்......தேம்ஸ் நதிக்கரை ஓரம்...அந்த குளிருக்கு இதமாய் 'ப்பர் கோட்'அணிந்துகொண்டு சித்தார்த்தனின் கையேடு கை கோர்த்துக்கொண்டு கனவுலகில் மெய் மறந்திருந்தாள் லதா.
"அப்பா ...இப்போ வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ஒரு வருஷம் ஓடிப்போச்சு"என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டாள் லதா.
" ஏன் ரொம்ப போரடிக்குதாடா செல்லம்..."
"ச்சே...அதெல்லாம் ஒண்ணுமில்ல. காலம்தான் எப்படி வேகமா ஓடுது.அத சொல்ல வந்தேன். உங்களுக்கென்னப்பா காலேயில ஹாஸ்ப்பிட்டலுக்கு போனா...சாய்ந்திரம்தான் திருப்பி வரீங்க..போற எடத்துல வேற செகப்பா...வெள்ளத்தோல போட்டுக்கிட்டு.. ஈ...ஈ..ன்னு பல்ல காட்டி எப்பவும் ஒரு இளிப்பு இளிச்சிகிட்டு நர்ஸுங்க. அதில்லாம தஸ்..புஸ்ன்னு இங்கிலீஷ் பேசிகிட்டு போற பொம்பள டாக்ட்ருங்க வேற. ம்..ம்...நீங்க ரொம்ப கொடுத்தவச்சவங்கதான் "
"ஆமாம்...ஆமாம்... எங்க ஹாஸ்ப்பிட்ல மேரி...மேரின்னு ஒரு நர்ஸ் இருக்கா. ஹோ...
அவ அழகென்ன...
நீள மூக்கென்ன...
ச்செறி கன்னங்களென்ன...
கண்ணைப்பறிக்கும் லிப்ஸ்டிக் பூசின உதடுகளென்ன....
அவ போட்டிட்டிருக்கிற குட்ட கவுன் என்ன...
அதுக்கும் மேல இன்னும் என்னென்னவோ..."
"ம்ம்....போதும் போதும். என்ன தொரைக்கு மூடு ஏறிடிச்சி போல இருக்கு. வாங்க...வாங்க...வீட்டுக்கு வாங்க .
மிச்ச கச்சேரியை அங்க வச்சிக்கிறேன்" என்று கோபம் கொண்டதுபோல் ஊடல் கொண்டாள்.
அவனும் பயந்தது போல் பாவனை செய்து " அவளுக்கு எல்லாம் இருந்தும் என்ன?..என் பூனைக்குட்டிக்கு இருப்பது போல இந்த கரு...கரு...அலை...அலையான கூந்தல் உண்டா? இந்த பஞ்சுமிட்டாய் கன்னங்கள் உண்டா? இந்த ஒடிஞ்சி விழுற சிற்றிடை உண்டா? இல்லை இயற்கையான இந்த மணம்தான் உண்டா? எல்லாம் போலிகள்...வெறும் ஒப்பனைகள்"
அவள் களுக்கென்று சிரித்து " அப்பப்பா....இந்த ஆம்பளெங்களே ரொம்ப கில்லாடிங்கப்பா.எதையாவது சொல்லி சமாளிச்சிடுவீங்களே..." என்று முணுமுணுத்தாள்.
அவன் கிறங்கி போனான் .
"BIG BEN " ஆறு முறை அடித்து ஓய்ந்த போதுதான் அவர்கள் இந்த உலகத்துக்கே திரும்பினார்கள். Dr. சித்தார்த்தன் MD முடித்துவிட்டு மேற்படிப்புக்காக இதோ...லண்டனில்.கூடவே அவன் மனைவி லதா.
தொடரும்.