அவளின் அன்பு

அவள் பிடிவாதமாக இருந்தாள், அவள் சொல்லிற்கு மறுவார்த்தை நான் பேசக்கூடாது, பேசினாலோ, அன்று முழுவதும் ஒரே அழுகைத்தான். கூடவே, சண்டையும் சிணுங்கலும் என்னை வாட்டிவதைக்கும். அந்த அன்பு... கொஞ்சம் அதிகாரமான அன்பா? என எண்ணத் தோன்றும். எங்கே? அப்படியெல்லாம் கணக்குப்போடுவது, அதற்கெல்லாம் நேரமேது? இடைவிடாத அவளின் அன்பின் சர்ச்சையில் நான் சிலந்தி வலைக்குள் இருக்கும்போது சிந்திக்க வழியேது?
என்று அவளைப் பெண் பார்க்க சென்றேனோ! நான் அவளது கணவனாக அவளுக்கு காணப்பட்டேனோ! அன்று தொடங்கியது. அன்று அவள் அன்பில் விழுந்தவன் தான் இன்றும் எழவில்லை, ஏன் எழ வேண்டும் ?என்ற கேள்வி கூட என்னிடம் உண்டு. எனக்கு என்ன குறை? ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாள். நான் கவலையில்லாமல் வேலைப் பார்க்கிறேன். இன்று எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவனுக்கு பத்து வயது, ஐந்தாவது போக போகிறான். இரண்டு வயது பெண் தேவதை. அவர்களோடு இருக்கும் போது நானும் குழந்தை உலகத்திற்குப் போய் உலாவதுண்டு.
அவர்களோடு நாள் முழுவதும் விளையாடி மகிழ்ந்தும், அவள் என் மீது கொண்ட அன்பு குறைந்தபாடில்லை. அவள் அழகில் ஊர்வசி போல என்னுள் கிறங்கடிக்கும் வன்மை அது. அவள் என் மீது கொண்ட முரட்டுத்தனமான அன்பு எல்லாவகையிலும் நல்லதாகவே உள்ளது. ஒரு முரட்டு ஆணைக் கட்டிப் போட, அப்படிப்பட்ட ஒரு பெண் தேவை. அப்படிப்பட்ட அன்பாலே குடும்பம் என்ற உன்னத கோட்பாடு நல்லபடி செல்கிறது. அதனால், அவளிடம் காணப்படும் சில குறைபாட்டை நான் ஒதுக்கியே ஆகணும். அவளுடைய பிடிவாதம், எங்கள் குடும்பத்தைப்பற்றி மற்றவர் தரக்குறைவாக எண்ணிவிட கூடாது என்று சில இடங்களில் பொய்கூட கூறுவாள்.அதையும் நான் மன்னித்தே ஆகணும். ஏனென்றால், அவளுடை அன்பான போக்கால் குடும்பம் அல்லவா நல்ல முறையில் செல்கிறது.

எழுதியவர் : தணல் (13-Mar-22, 12:17 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : avalin anbu
பார்வை : 171

மேலே