சாருலதா அத்யாயம் 12
15 / 04 / 88
இன்று லதா வந்திருந்தாள். யார்......?. Dr.சித்தார்த்தனின் மனைவி. Dr.சித்தார்த்தன்......ஆம் அவரேதான். என் சித்துதான். சேச்சே..... இப்படி கூப்பிட.....அட...இப்படி நெனைக்ககூட கூடாது. எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர் இப்போது லதாவின் கணவர். இருக்கட்டுமே.....இப்போ என்ன அதுக்கு? மொதல்ல அவர் என் சித்து....அப்புறமாத்தான் லதாவின் கணவர். அன்றே கல்லூரி விழாவில் Vice - Chancellor எடுத்து சொன்னார். ஏன் ஒங்க வாழ்க்கையை பங்கிட்டு கொள்ளக்கூடாதுன்னு? அழகான கோடு போட்டுக்கொடுத்தார். நாங்கதான் ரோடு போடாமல் விட்டு விட்டோம். இவராவது தைரியமா சொல்லி இருக்கலாம்....அட நானும் படிச்சவதானே ....நானும் சொல்லல... ரெண்டுபேருமே கோழைங்கதான். அடுத்த நாள் பாத்தோமே அப்பவாது வெளிப்படுத்தியிருக்கக்கூடாது? ச்சே....என்ன மடத்தனம் பண்ணிட்டோம். அதிர்ஷ்ட்டம் ஒரு தடவத்தான் கதவைத் தட்டும். காலம் கடந்து சூரிய நமஸ்காரமா?
இப்படியெல்லாம் நெனைக்கிறோமே.....எழுதுறோமே....அதுவும் அவருக்கு கல்யாணம் ஆன பிறகு? தப்புத்தப்பு தப்பு. தப்புதான்...தப்புதான்...ஆனா இந்த பாழும் மனசிருகே...கொரங்காட்டம் இப்படி ஆட்டம் போடுதே...அவரை பக்கத்திலேயே பார்க்கும் போது,,,,,இத்தனை நாள் அடக்கி வச்சதெல்லாம்.....கட்டி காப்பாத்தி வந்ததெல்லாம்....இப்படி பொடிப்பொடியாக போகும்னு நெனச்சுக்கூட பாக்கல....சரி....என் சோகம் என்னோடவே போகட்டும்.
லதா.....ஓ...என்ன ஒரு பாக்கியசாலி...அவளுக்கு மட்டும் என்ன கொர? லக்ஷ்மிகடாக்ஷமாய் இருக்கிறாள். கொழந்தை மட்டும்தான் இல்லையே தவிர...போகட்டும் விடு. அவளே ஒரு குழந்தைதான். அவளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ...! தெரிந்திருக்காது....தெரிந்திருக்காது. தெரியவும் வேண்டாம். என் ஆசைகள்.....என் கனவுகள்....எல்லாம் என்னோடயே புதைந்து போகட்டும். Dr.சித்தார்த்தன் ......நீங்க எங்கிருந்தாலும்.....எப்படியிருந்தாலும் நீடுழி வாழவேண்டும். அதுவும் என் தங்கை லதாவுடன். Dr. சித்தார்த்தன் உங்கள் நினைவுகளுக்கு இன்னையோட ஒரு பெரிய புல்ஸ்டாப்.
லதாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து விழி ஓரமாய் வழிந்தோடியது.
தொடரும்.