காதலின் பிணைப்பு

காதலின் பிணைப்பு!!
*******************

வாழ்வெனும் வேள்வியின் வாசனைத் திரவியம் /

தாழ்விலா மாந்தரின் தந்திரம் ஆனந்தமே !

இல்லற வாழ்க்கையோ துறவறத் தனிமையோ

நல்லறம் யாதெனின் நயத்தகு மகிழ்ச்சியே !

தலைவனும் துணைவியும் தன்மக்கட் பேறுடன்

தொழிலொடு கலைகளும் கண்ணெனப் போற்றுமே!

உற்றவர் சுற்றமும் ஊரினர் பந்தமும் /
கற்றவர் மற்றவர் கூடிடக் களிக்குமே !

தேனின் சுவையெனத் தித்திக்கும் நாளெலாம் /

ஆனந்தம் கொண்டாடும் அன்பின் பிணைப்பிலே !

வாழ்வதும் அன்பிலே வளர்ப்பதும் பண்பிலே /

தாழ்விலாச் சந்ததி தாரணி போற்றுமே /

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (24-Mar-22, 10:13 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 125

மேலே