ரசிகர் படும் பாடு
ரசிகர்" நீங்கள் காலையில் பாடும் ராகம் என்ன? "
பாடகர் " காப்பி"
ரசிகர் " உங்களுக்கு மிகவும் பிடித்த நாடு!
பாடகர் " கானடா "
ரசிகர் " உங்கள் மனைவியின் பெயர்?
பாடகர் " பைரவி "
ரசிகர்: உங்களின் பரம ரசிகரின் பெயர்?
பாடகர் " சிந்து பைரவி "
ரசிகர் " உங்களுக்கு பிடித்த ராகம்?
பாடகர் " வசந்தா"
ரசிகர் " ஏன் இந்த தடவை உங்களுக்கு சங்கீத கலாநிதி பட்டம் கிடைக்கவில்லை?
பாடகர் " விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது என் செகரட்ரி 'சங்கீதா, கலா, நிதி' என்று தனித் தனியாக எழுதிவிட்டாள். "
ரசிகர் " நீங்கள் உக்ரைன் நாட்டில் பாடப் போவதாக இருந்ததே?
பாடகர் " இப்போது உக்ரைனில் ரஷ்யா குண்டு போட்டு பலமாக கச்சேரி செய்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு அங்கு பாட மேடை இருந்தால் என் கச்சேரி நடக்க வாய்ப்பு உள்ளது."
ரசிகர் " உங்கள் குரல் பெண்ணின் குரல் போல உள்ளது என பரவலாக பேசப்படுகிறதே? "
பாடகர் " என் சொந்த ஊர்'பெண்ணாடம்'.அப்படி என்றால் என் குரலும் ' பெண்ணாட்டம்' தானே இருக்கும்.!!!