அற்புதமான காதல் கவிதை
💓💓💓💓💓💓💓💓💓💓💓
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💓💓💓💓💓💓💓💓💓💓💓
கண்ணே !
என்னை காதலித்தால்
கண்டிப்பாக
உன்னைக் கரம் பிடிப்பேன்....!
கண்ணுக்குள்ளே
உன்னை வைத்து
காலமெல்லாம்
காத்திடுவேன்....!
உள்ளங்கையில்
உன்னை வைத்து
உயிர் உள்ளவரை
தாங்கிடுவேன்....!
என் தோளையே
ஊஞ்சலாக்கி
உன்னை சீராட்டுவேன்.....|
என் மார்பையே!
மஞ்சமாக்கி
உன்னை தாலாட்டுவேன்..|
பூங்காற்றே...!
நீ நடக்க
பூவாலே
பாதை செய்வேன்....!
புது நாற்றே|
நீ வாழ
பொன்னாலே
வீடு கட்டுவேன்.....!
கடல் வற்றிப்போனாலும்
என் காதல்
வற்றிப்போகாது......!
வானம்
நிறம் மாறினாலும்
என் அன்பு
என்றும் மாறாது......!
சோகம் வந்து
சேரும்போது
தோழியாக
நானிருப்பேன்.....!
நோய் வந்து
தாக்கும்போது
அன்னையாக
அரவணைப்பேன்....!
ஆனந்தமாய்
நீ வாழ்ந்திடவே
அல்லும் பகலும்
உழைத்திடுவேன்.....!
அடுத்த ஜென்மத்திலும்
உன்னையே !
தந்திட
ஆண்டவனி
வேண்டிடுவேன்......!
*-கவிதை ரசிகன்*
💓💓💓💓💓💓💓💓💓💓💓