என் செய்வேன்

சிற்றின்ப கவிதையோ
ஜோராய் இங்கு விலைபோகுது.
ஐயகோ....
பேரின்ப கவிதையோ
கேட்பாரற்று கிடக்குது.

இன்றைய பொழுதை
இன்றைய பொழுதே
சுவைத்திட வேண்டுமென
பாழும்மனம் துடிக்குது.

நாளைய பொழுதை
நினைக்ககூட விடாமல்
இப்பூவுலகின் வேகம்
பாழும்கிணற்றில் தள்ளுது.

சிற்றின்பக் கடலில்
மூழ்கி முத்தெடுக்க
முயன்றவர்கள்
தோற்றதுதான் சரித்திரம்.

அந்த இன்பத்தில்
மூழ்கி மூச்சடைத்து
வாழ்க்கையை
தொலைத்தவர்கள்தான் தரித்திரம்.

சிற்றின்பம் பேரின்பத்திற்கு
முதற்படி ஒத்துக்கொள்கிறேன்.
முதற்படியிலேயே மயங்கி
நின்றுவிட்டால் என்செய்வேன்?

பலவர்ணம் காட்டும் நீர்க்குமிழி
சிற்றின்பம்...கவர்ந்திழுக்கும்
நித்திய இன்பத்தில் மூழ்க்கி
பேரின்பம்...முக்திகொடுக்கும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Apr-22, 8:12 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : en seiven
பார்வை : 447

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே