Miss you

தெருமுனையைக் கடக்கும் போதெல்லாம்
என் கண்கள் அலசி ஆராய்கிறது...

வெளியில் செல்லும் நேரங்களில்
வெகுளியாய் உன்
தெருவினை வேடிக்கை பார்க்கிறது...

இரண்டொரு நாட்கள் பார்க்கவில்லை
என்றாலும் இதயம் படபடக்கிறது...

என்னைத் தேட வைப்பதில்
உனக்கு ஏன் இத்தனை ஆசை

நீ இல்லாத நாட்கள்
கொஞ்சம் கடினமாகவே நகர்கிறது..

முட்டாள்தனமாய் இருந்தாலும்,
அடம்பிடிக்கிறது உள்ளே ஒரு
குழந்தைத்தனம்...

காற்றில் என் கைகளை நீட்டி
உன்னைத் தேடுகிறேன்..
இந்த காற்று
உன் வாசலை வந்தடையும்
என்ற நம்பிக்கையில்

கதை போல நான் சொல்வதை எல்லாம்
கேட்டுக் கொள்
ஆனால்
இது கதையல்ல நிஜம்

புலனத்தில் இல்லையென்றாலும்
பேஸ்புக்கில் ஆவது வந்து சேர்வாய்
என்று நம்புகிறேன்...
நம்பிக்கையை வீண் செய்யாதே ...

இத்தனை தவிப்புகளுக்கும்
பின்னால் நிமிர்ந்து நிற்கும்
ஒற்றை வார்த்தை
Miss you ...


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (19-Apr-22, 9:26 pm)
பார்வை : 11634

மேலே