குயில் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நல்லதொரு பத்தியமாம் நாடாது வாதபித்தஞ்
சொல்லரிய மானே சொறிஏகும் - வல்ல
குயிலருந்த மேகம்போங் குன்மவலி தீருந்
துயிலிலதி போகமுறுஞ் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
பத்தியத்திற்காகும் இக்கறியினை உண்டால் வாதம், பித்தம், புடை, பிரமேகம், வயிற்றுவலி இவை போகும்; தூக்கத்தை உண்டாக்கும்