தாராக்கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)
தாராக் கறிஅருந்தத் தாதுமிக உண்டாகும்
பேராக் கபம்வளரும் பெண்மயிலே - தீராத
வாந்தி அரோசகமும் வன்கரப்பன் புண்ணுமிகச்
சே’ர்’ந்துவரும் இப்பலனைச் செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
இக்கறியை உண்டால் தாது விருத்தி, கபம், வாந்தி, உணவில் வெறுப்பு, கடுவன், சிரங்கு ஆகியவை விருத்தியாகும்