காதல் நெஞ்சம் நீ நினைவு நான் ❤️💕

காத்திருந்த காலம் உன் கனவுவோடு

ஒடும்

நிலவாக நானும் தேய்ந்து விட்டேன்

போதும்

உன் குரல் கேட்க ஆசைப்படும் நேரம்

மனதில் உன் முகம் வந்து போகும்

என் வார்த்தை காற்றில் உன்னை

வந்து சேரும்

என் பார்வை நீ வருவாயா என

வாசல் வந்து போகும்

மனம் லேசாக வலிக்கும்

என் சிரிப்பு அதை மறைக்கும்

தொலைவில் இருந்தாலும்

நினைத்து கொண்டு தான்

இருக்கிறேன்

இதயத்தில் உன்னோடு தான்

வாழ்கிறேன்

எழுதியவர் : தாரா (12-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 205

மேலே