வாழ்க்கை தத்துவம்

♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️

*என் மொழ*

படைப்பு *கவிதை ரசிகன்*

♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️

உடல் என்பது
சிறுகதை....
உள்ளம் என்பது
தொடர்கதை...
உயிர் என்பது
விடுகதை.....

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

நமக்காக வாழ்ந்து
நம்மோடே செத்தாலும்...!
எந்தக் கைமாறும்
செய்ய முடியவில்லை
நம்" இதயத்துக்காக "

◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️

மனிதா!
உன் கையெழுத்து மட்டுமல்ல
உன் தலையெழுத்தும்
உன் கையில்தான் உள்ளது...

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

நெருப்பு கூட
பற்றியைத்தான் அழிக்கும்
வெறுப்பு
பற்ற வைத்ததையே!
அழித்து விடும்....

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

நாட்டின்
இருளைப் போக்கும்
சூரியனாக
வாழாமல் போனாலும்...
வீட்டின்
இருளைப் போக்கும்
சுடராகவாவது
வாழ்ந்து விடு...
வாழ்வது
ஒரு முறை
வாழ்த்தட்டும
தலைமுறை....!

*கவிதை ரசிகன்*

♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️♥️♣️

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-May-22, 9:55 pm)
பார்வை : 38

மேலே