அதளக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அதளக்காய் வாய்க்குருசி யாய்இருக்குந் தின்றாற்
கதளவொட்டாப் பித்தங் கதிக்கும் - பதலத்தின்
மந்தமுண்டாம் வாயுமிக வந்தடருந் தப்பாதே
கந்த மலர்க்குழலாய் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
சுவையாயிருக்கும் இதனையுண்டால் பித்தம், வயிற்று மந்தம், வாதம் இவை உண்டாகும்