ஏ டு இசட்

03-ஜூன்-2022

ஜூன் மாதத்து
குற்றாலத் தென்றலின் இதம்
நண்பன் கண்ணனின் நட்பு
என்றும் தரும்...

சவுதி அராம்கோ...
ஆயில் எடுத்து விநியோகம்
செய்வதில் ஏபிசிடி
தெரியாத எனக்கு
கண்ணனின் பென் டிரைவ்
ஏ டு இசட் சொல்லித் தந்தது..
சபைகள் கை தட்ட வைத்தது..

கோகுலக் கண்ணன்...
கீதை தந்தான்...
ஜிஸிஇ கண்ணன்... நட்புக்கு
இலக்கணம் தந்தான்...

கண்ணன்...
வளைகுடா நாடுகளின்
கடும் தட்ப வெப்பங்கள்
இவனுக்கு பஞ்சு மெத்தை.. உதவும்
தளம் உருவாக்கிக் கொள்வதில்
காட்டுவான் தன் கெத்தை...

இளகிய மனதினன்... உதவும்
கரத்தினன்... இனிய
பேச்சினன்... ஆலோசனைகள்
அள்ளி வழங்குபவன்...

நண்பன் கண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
வானமும் வசப்பட
வாழ்க பல்லாண்டுகாலம்...
எல்லாம் உனக்கு வசந்தகாலம்...
👍🙏🌹😀👏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (4-Jun-22, 11:49 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 188

மேலே