பொய்

காதலுக்கும் கவிக்கும்
பொய்யே பிரதானம்.
ஆம்...
உண்மையான காதலுக்கும்
உயிர்ப்பான கவிக்கும் - சிறு
பொய்யே உயிர்நாடி..

காதல் சங்கீதத்திற்கும்
கவிதை தாளத்திற்கும்
பொய்யே அடிநாதம்.
சிறுசிறு பொய்கள்
காதல் காலூன்ற
உரமாக்கிப் போகும்
எதார்த்த மெய்யே.

காதலுக்கு அடிப்படை
காமமே...
காமத்திற்கு அடிப்படை
பொய்மையே.
பொய்யில்லாமல் காதலில்லை
கவியும் இல்லை.
பொய்....
கற்பனையின் ஊற்று.
அதுஇல்லாமல்
காதலை வாழவைக்க முடியாது.
கவியையும் சிறப்பாக்க முடியாது.
ஏன்?
அவைகளை ரசிக்கவும் முடியாது.

உப்பில்லாமல் உணவில்
சுவையில்லை.
பொய்யில்லாமல் காதலில்
சுவையில்லை.
ஜாக்கிரதை ...
எதுவும் அளவோடு
இருந்தால்தான் ருசி.
ஒன்றுமட்டும் நிச்சயம்
இரண்டுக்கும்
அடித்தளமாய்...
ஆணிவேராய்....
உண்மை இருக்கவேண்டும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Jun-22, 10:18 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : poy
பார்வை : 117

மேலே