இன்பவெள்ளம் இங்கினி மேல் ஓடவேணும்

எல்லா மிங்கே மாறிபோச்சு
இனிச்ச தெல்லாம் கசந்துபோச்சு !
வல்லோன் கையை ஓங்கலாச்சு !
வரம்பு மீறிப் போகலாச்சு !
இல்லை என்னும் புலம்பலாச்சு
ஏழை வாழ்வும் அழியலாச்சு !
சொல்லிச் சொல்லி அழுதாச்சு
சோகக் கதையும் நீண்டாச்சு !

காட்டை வெட்டி அழிக்கிறாங்க
கழனி விளைய தடுக்கிறாங்க !
நாட்டைச் சுரண்டி கொழுக்கிறாங்க !
நல்லவன் போல நடிக்கிறாங்க !
கேட்டை மட்டும் விதைக்கிறாங்க
கோட்டை ஏறி ஆளுறாங்க
காட்டு விலங்கை விரட்டுறாங்க
கனிமம் தோண்டி விற்கிறாங்க !

நீதி நேர்மை அழிந்துபோச்சு
நிம்மதியும் தொலைந்துபோச்சு !
சாதிச் சண்டை நாளுமாச்சு
சங்கடங்கள் கூடிப்போச்சு !
மோதி மண்டை உடையலாச்சு
மூர்க்க எண்ணம் வளரலாச்சு !
நாதி அற்றுப் போனவங்க
நடுத்தெருவில் நிற்கலாச்சு !

மடமை தன்னை ஒழிக்கவேணும்
மானுடத்தைக் காக்கவேணும்
தொடர்ந்து வந்த பிரிவினையை
தீயில் போட்டு கொளுத்தவேணும்
தடைபோட எண்ணும் தறுதலையை
துடிதுடித்து மாறிடவே வைக்கவேணும்
இடரொ ழிந்து இன்பவெள்ளம்
இங்கி னிமேல் ஓடவேணும் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jun-22, 7:33 pm)
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே