நாம் சேர்ந்திருந்த நாட்கள் கனவாகி போனது 555

***நாம் சேர்ந்திருந்த நாட்கள் கனவாகி போனது 555 ***



என்னுயிரே...


உயிரே ,அன்பே,பேரழகே
என்று கொஞ்சியவன்தான்...

அந்த நாட்களை எல்லாம்
நீ மறந்துவி
ட்டாயோ...

வாழும் காலமெல்லாம்
என் மடியில் தலைசாய்க்க...

உனக்கு ஆசை என்றாயே
மறந்துவிட்டாயோ...

நீ பேசிய வார்த்தைகள்
எல்லாம் என் நெஞ்சை கிழித்தாலும்...

அன்பாக பேசி
ய நீ
வார்த்தைகள் எல்லாம்...

கண்ணீராக
விழிகளில் மிதக்குதடி...

உன்னிடம் நான் எதையும்
தி
ணிக்கவில்லை...

என்னை உன் கைக்குள்
வைத்திருக்க பேராசை கொண்டாய்...

கைக்குள் இருக்கும்
பட்டாம் பூச்சியை...

இறுக்கி பிடிக்க
ஆசை கொள்கிறாய்...

மறுத்த என்னை
முழுவதுமாக
விட்டுவிட்டாய்...

நாம் சேர்ந்திருந்த நாட்கள்
எல்லாம் கனவாகி போய்விட்டது...

கற்ப
னை செய்திருந்த நம்
வாழ்க்கையும் கலைந்துவிட்டது...

நீயும் நானும்
தனித்திருந்த நாட்
கள் எல்லாம்...

இன்று விழியோரம்
ஈரமாக கசியுதடி...

என்
ப்ரியமானவளே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (11-Jun-22, 8:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 235

மேலே