காணத் தழுவும்
நேரிசை வெண்பா
குற்றஞ்செய் தானுடன் ஊடா யவன்கூட
தொற்றிப் படரவே யோடுகிறாய் -- எற்றொதுக்கி
தொற்றுமுன் நெஞ்சின் குறையை உமதிடம்
எற்றமுடன் சொல்வ தெவர்
ஊடா. = சண்டைப் பிடிக்கா
தொற்றுதல். = தழுவிக்கூடல் எற்று =. மோதுதல், முரண்டு செய்தல் ,மோதல் தவிர்த்து
எற்றமுடன் =. மனத் துணிவுடன்
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்
காமத்துப்பால் குறள்.. 4. /. 22 வதுப்பாடல்