நம் எல்லோருக்கும் தாய் தந்தை எல்லாம் சூரியனே

ஆதவனின் குடும்பம் இது
சுழலுகின்ற கோள்கள்
அதன் குடும்ப உறுப்பினர்கள்
தன்னைத் தானே சுழன்று
சூரியனையும் சுற்றிவரும்
நம் பூமியும் அந்த குடும்பத்தில் ஒருத்தனே
தலைவன் ஆதவன்

உதயமாகும் ஆதவன் அத்தமிக்கிறான்
என்பதெல்லாம் தன்னைத் தானே சுழலும்
பூமி செய்யும் தோற்ற மாயமே
உண்மையில் ஆதவன்
எழுவதுமில்லை விழுவதுமில்லை
அவன் எப்பொழுதுமே ஒளிர்கிறான்

உலகின் உயிர் உலகின் ஒளி
நம் எல்லோருக்கும் தாய் தந்தை எல்லாம் சூரியனே !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-22, 9:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

சிறந்த கவிதைகள்

மேலே