ஒரு நடிகையுடன் பேட்டி

நிருபர்: நீங்கள் பிறந்தபுதிதில் மிகவும் அழகாக இருந்தீர்கள் என்று உன் அம்மா சொல்லியிருக்கிறார்களே?
நடிகை: நீங்களும் அப்படித்தானே!

நிருபர்: நீங்கள் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
நடிகை: சுமார் முப்பது படங்கள்
நிருபர்: ஆனால், இன்று வரை நீங்கள் நடித்த மூன்று படங்கள் தானே வெளிவந்திருக்கிறது? மீதி இருபத்தியேழு படங்கள் இன்னும் வெளிவரவில்லையே?
நடிகை: இரண்டு படங்கள் நான் நடித்த பிறகு கைவிடப்பட்டது. மீதியுள்ள இருபத்திஐந்து படங்களில் ஐந்து என்வீட்டில் என்னை வைத்து எடுத்த சிறிய டிக் டாக் படங்கள். இன்னும் ஐந்து படங்கள் நான் விளம்பரத்திற்கு கொடுத்தது. இன்னும் ஐந்து படங்களுக்கு எடுத்த ரீல்கள் தொலைந்து போய்விட்டது. இன்னும் ஐந்து படங்களில் என் முகம் சரியாக எடுபடவில்லை என்று வெட்டிவிட்டனர். பாக்கியுள்ள பாத்து படங்கள் பத்து சினிமா பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது. இப்போது உங்களுக்கு திருப்தி தானே?
நிருபர்: ஆஹா எவ்வளவு அருமையாக உங்கள் படக்கணக்குகளை சொன்னீர்கள். ஆமாம் உங்கள் தாய்மொழி என்ன?
நடிகை: என் அம்மாவின் அப்பா மறதிக்காரர், இல்லீங்க , மராட்டி தெரியாத மராட்டிக்காரர், அவருடைய அப்பா தமிழ் தெரிந்த ஆங்கிலேயர், அம்மா ஆங்கிலம் தெரியாத ரஷ்ய பெண்மணி. என் அம்மாவின் அம்மா மலையாள நாட்டில் ஒரு அரேபியருக்கும் , பிரேசில் நாட்டு பெண்மணிக்கும் பிறந்தவர். என் அம்மா பெங்களுரில் பிறந்து கனடாவில் வளர்ந்து, அமெரிக்காவில் திரிந்து, பின்னர் நேபாளுக்கு சென்று அங்கே அரண்மனையில் இளவரசருடன் சில நாட்கள் தங்கி விட்டு, அங்கிருந்து சிக்கிம் சென்று அங்குள்ள இளவரசரை மணந்துகொண்டு சிலவருடங்கள் வாழ்ந்துவிட்டு, அந்த இளவரசர் திடீரெண்டு சீனா ஓடிவிட்ட பின்பு கொஞ்ச மாதங்கள் பூடான் நாட்டில் தேநீர் விற்றுவிட்டு, அவளுக்கு அங்கங்கே பிறந்த குழந்தைகளை அந்தந்த இடத்தில விட்டுவிட்டு, அதன் பின்னர் மேகாலயா மாநிலத்தில் ஒரு குடியானவனுடன் சேர்ந்து வாழ்ந்தபோது நான் பிறந்தேன். நான் அறுவடையாகி ஆறுமாதத்தில் என் குடியானவன் அப்பன் போய்விட்டான். சீனா பாகிஸ்தான் போகவில்லை, இந்த உலகத்தை விட்டே போய்விட்டான். அதன் பின்னர் என் தாய் துபாய் சென்று அங்கே பிரெஞ்சு நாட்டு ஒருவருடன் கூட்டுவியாபாரம் செய்துவிட்டு , என்னை அங்கேயே படிக்கவைத்து, நான் அவரிடமிருந்து ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்டு அதன் பிறகு ஆந்திராவுக்கு வந்து விசாகப்பட்டினத்தில் ஒரு கன்னட மனிதரை சந்தித்து, அவரை காதலிக்காமலேயே கல்யாணம் செய்துகொண்டு. ஆனால் என் கணவருக்கு கன்னடம் தெரியாது. ஏனெனில் அவர் வீட்டில் ஹிந்தியும் சமஸ்கிருதமும் தான் பேசுவார்களாம். இந்த இரண்டு மொழிகளும் எனக்கு தெரியாததால் நான் அவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டேன்.
நிருபர் தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட மயக்கம் அடைந்து விட்டார். நடிகை கொஞ்சம் தண்ணீரை அவர்மீது தெளித்தவுடன், நிருபர் கேட்கிறார்: " நான் எங்கே இருக்கிறேன்?"
நடிகை : என்பக்கத்தில் இருக்கிறீர்கள்.
நிருபர்: இல்லை நான் எந்த நாட்டில் இருக்கிறேன்?
நடிகை: எதுக்கு சந்தேகம்? சென்னையில் தான்
நிருபர்:சரி நான் புறப்படுகிறேன்.
நடிகை:அதெப்படி , நாம் இப்போ ரொம்ப நெருங்கி உட்கார்ந்து இருக்கிறோம். அப்படியே கொஞ்சம் ஜாலியாக பேசி காதலித்து அடுத்த மாதம் கல்யாணம் செய்துகொண்டுவிடலாம்.
நிருபர்: எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி மூன்று பிள்ளைகள்.
நடிகை : அப்போ இன்னும் சுலபம். ஏற்கெனவே உங்களுக்கு எல்லா அனுபவமும் இருக்கிறது, என்னை போல. கம் ஆன் டார்லிங் !

நிருபர் நடிகையிடம் தப்பித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் எடுக்கிறார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Jun-22, 4:19 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 94

மேலே