பெண் விடுதலை
பெண் விடுதலை
ஒழுகிசை அகவல் ஓசை ஆசிரியப்பா
பெற்றவர் மகளை பொத்தியே வளர்க்க
பூட்டியார் வளர்த்தார் காலில் சங்கிலி
பிணைத்தார் என்றவர் மிகையாய் சொன்னார்
பெற்ற பெண்ணைப் பாது காத்தல்
என்பதை அடைத்து வைத்தார் என்றார்
பெண்களை மலையது முகத்திலும் அரவ
மற்ற காட்டிலும் திரிய விடவும்
யாருடன் வேண்டு மானால் எங்கும்
சுற்றியேத் திரிதல் இன்றைய தமிழ்கலாச்
சாரம் கேட்டுமே துளைக்தெடுக் கிறது
இதெல்லாம் எங்குபோய் முடிந்தது
நமதுடை குடும்பம் காணா போகவே
எழுதிப் பேசிய வருடைய மாதர்
இல்லம் தங்கக் கேட்டவன் குடும்ப
பெண்டிரும் தறுதலை மகளிர் என்றவர்
நகர கிராம மெல்லாம் கெட்டார்
பள்ளியின் முடிவு ஆண்டில் பெண்டிர்
பள்ளியின் வகுப்பில் பாட்டிலை குடித்தார்
பஸ்ஸிலும் குடித்தார் வீட்டிலும் குடிக்கிறார்
சுற்றுலா பெயரில் கண்ட காதல
ருடனவள் பலதையுங் கற்று போதை
மாத்திரை தின்று கருவையும் வயிற்றில்
வாங்கி பெற்றோர் மானம்
போக்கிட பெண்சுதந் திரமா சொல்லுமே
.....