அசையும் உன்செந்தளிர் மேனியெழிலிலும் எழுதுகிறேன் எனைமறந்து

தலைஉயர்த்தி வானத்தைப் பார்த்து கற்பனையில் கவிதை எழுதவில்லை
கலையெழில் தவழும் கயல்துள்ளும் கவின்கரு விழிகள் இரண்டிலும்
கலைந்தாடும் நீல வண்ணப் பூங்குழல் தவழ்ந்திடும் அழகிலும்
சிலையென அசையும் உன்செந்தளிர் மேனியெழிலிலும் எழுதுகிறேன் எனைமறந்து

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-22, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே