உன் இதயத்தை தொட்டபோது கவிதையானது

மலரைத் தொட்ட தென்றல்
உன்னைத் தொட்டு மனம்குளிர்ந்தது

வானைத் தொட்ட நிலவு
உன்மேனி தொட்டு மனம்மகிழ்ந்தது

கடல் ஆழத்தைத் தொட்ட முத்துக்கள்
உன் செவ்விதழில் சிறப்பு பெற்றது

இலக்கிய அழகுகளைத் தொட்ட என் எழுத்து
உன் இதயத்தை தொட்டபோது கவிதையானது !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-22, 1:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே