ஒரு பல் பையன்
'துளசி'யாய் இருந்த நான் 'துள்சி'யாகி
'சிவன்'னாயிருந்த 'ஷிவ்'வை மணநதேன்.
முதல் மகப்பேறிலேயே இரட்டைக் குழந்தைகள்
ஆண் குழந்தையும் பெண் குழந்தையும்!
இறைவன் கொடுத்த வரம் இரட்டையர்கள்
வலைத்தளத்தில் பிறமொழி பெயர் தேடல்
கடவுளைக் குறிக்கும் பெயர் மகனுக்கு
'ஏகாதந்த்' என்பதே அவன் பெயர்.
அழகான அருமை மகளுக்குத் கிடைத்த பெயர்
'ஏக்தா' எனும் அரிதான பெயராகும்.
இவ்விரு பெயர்களும் இனிய பெயர்கள
ஊரார் மெச்சிக் கொஞ்சி மகிழ்ந்தனர்.
தமிழர் வழக்கப்படி தமிழரான நாங்கள்
பிறமொழிப் பெயர்களை பிள்ளைகளுக்குச்
சூட்டி பெருமிதம் அடையும் பெற்றோர் நாங்கள்.
தமிழுணர்வு உள்ளவர்களே வாழ்த்துங்கள் எங்கள் செல்வங்களை!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Tulsi = Sacred plant (Basil)
Siva, Sivan = Shiv. Hindi Origin
Ekadant = One who has one tusk (tooth). Another name for Lord Ganesha. Sanskrit name.
Ekta = Unity, Identity. Sanskrit name.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
