மான் விழியாளும் சிந்தனைச் செல்வியும்

என் பேரு 'மந்தி'
தமழ் மந்தி என்று
தப்புக் கணக்கு வேண்டாம்
இந்தி 'மந்தி' நான்
பெண் குரங்கு அல்ல!

சிந்தனை யாளியாய்
எனையாக்க வேண்டி
பெற்றவர் வைத்த பெயர்
என் இனிய பெயர் 'மந்தி'

தங்கை பெயர் 'குரங்கி'
தமிழ்க் குரங்கி அல்ல
மான் விழியாள் அவளே
கவிஞர்களை ஈர்த்து
கவிதைகளில் மலர்வாள்.

'மந்தி'யும் 'குரங்கி'யும்
இனிய இந்திப் பெயர்கள்
தமிழ்ப் பெயர்களை வைப்பவர்கள்
தமிழரே அல்ல என்பது
தற்காலத் தமிழரின் நாகரிகம்.

அக்கா தங்கையின் பெயர்களை
"ஸ்வீட் நேம்ஸ்" என்று வாழ்த்துங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Manthi = thoughtful. Hindi feminine name.
Kurangi = deer


வானரம் = ஆண் குரங்கு

மந்தி = பெண் குரங்கு

எழுதியவர் : மலர் (5-Aug-22, 2:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

மேலே