நட்பென்று சொல்வார்கள்..
சின்னஞ்சிறு சிரிப்பும்
உவந்து செய்த உதவியும்
முதல் நொடி பூக்கும் மகிழ்ச்சியே...
அதுவே நட்பின் மலர்ச்சியே..!!
சிரித்திட்டோம் தொடக்கத்தில்
உதவிட்டோம் பழக்கத்தில்
துணைநின்றோம் துயரத்தில்
தோள்கொடுத்தோம் சமயத்தில்....
பகிர்ந்திட்டோம் அன்புதனை..
உரக்கச்சொல்வோம் நம்நட்புதனை..!!
ஒளியில்
என் நிழலாய் இருந்தாய்!
இருளில்
நீ ஒளியாய் வந்தாய்!!
நான் துயர்கொண்டு அழுதபோது
மழையாய் அதை மறைக்கின்றாய்..
மனம்கொண்டு மகிழ்ந்தபோது
என்சிரிப்பாய் நீ இருக்கின்றாய்..!!
உலகில் உள்ள உறவுகள் யாவும்
உனை உதறிவிட்ட போதிலும்..
உறுதுணையாய் இருப்பது
உயிருள்ள வரை தொடர்வது..
"நம் நட்பு" மட்டுமே..!!