வாழ்க்கை

கணவனைப் பிரிந்தவள்
எனத் தெரிந்தும்
அவளுக்கு தாலிகட்டி
மெட்டி அணிவித்து
தன் மனைவியாக்கி
குடும்பம் நடத்துபவனின்
உள்மனதை என்னவென்று சொல்ல
இவன் கறைப்படிந்தவனா
அல்ல சுத்தமானவனா
அவரவர் மனசுக்குத்தான் தெரியும் அவரவரின் கறையும் சுத்தமும்..
.

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Aug-22, 8:53 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 367

மேலே