விழிகள் பேசும் காதல் மொழி 555
 
 
            	    
                ***விழிகள் பேசும் காதல் மொழி   555 ***
என்னுயிரே...
உன்னை நான் பார்க்கும் 
ஒவ்வொரு நொடியும்... 
இதழ்களால் 
மொழிகள் பேசுவதில்லை... 
நீ 
விழிகளால் பேசி... 
காதல்ஜாடை வீசி 
என்னை கொள்கிறாய்... 
உன் குரல்கேட்க என் 
செவிகள் காத்துக்கிடக்கிறது... 
உன் கண்களால் பேசி 
என்னை தவிக்க வைக்கிறாய[டி]டா...
நான் வார்த்தை கொண்டு 
கவி எழுத காத்திருக்கிறேன்... 
நீ விழிகள் கொண்டு 
தினம் காதல் கவிதை... 
என் விழிகளுக்கு 
சொல்லி கொடுக்கிறாய்... 
நீ விழிகளால் காதல் 
மொழி பேசும்போது... 
பல நேரம் என்னை நான் 
கிள்ளி பார்த்திருக்கிறேன்... 
உன் 
விழிகளை பார்த்து... 
நான் பனிக்கட்டியாய் 
உறையும் போதெல்லாம்... 
உன் விழிகளும் என் விழிகளும் 
பேசுவது நினைவா கனவா என்று...
உன் 
கருவிழியின் பார்வை... 
என்னை காந்தமாக 
கவர்ந்திழுப்பது ஏனோ... 
தாய் பின்னால் 
ஓடிவரும் மழலை போல...
என் இதயம் உன் 
பின்னால் ஓடிவருத[டா]டி.....
 
                     
	    
                

 
                             
                            