திண்ணைப் பேச்சு

திண்ணைப் பேச்சு.
(மச்சானும் மச்சானும்)

ம1: உண்மை
தெரியவில்லை!
உலகை யார்
படைத்தான்?
உயிர்களை யார்
வகுத்தான்?
உண்மை
தெரியவில்லை
..........மச்சான்.

ம2: படைத்தவனும்,
வகுத்தவனும்,
கடவுள் என்பார்!?
அவனுக்கு பல
பெயர் உண்டு
.........மச்சான்.

ம1: எல்லாம் தெரிந்த
மனிதர்கள் சிலர்,
Big Bank என்றும்
Darwin என்றும்
ஏதோ சொல்லி
பிதற்றுகிறாரே!
.......அது ஏன் மச்சான்?

ம2: அதற்கும்
அப்பால் சென்று
ஒரு சிலர்!
கடவுளை பார்த்தேன்
என்றும்,
அவன் தன்னுடன்
பேசினான் என்றும்,
கூறுகிறாரே!
கேட்டு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை
......மச்சான்?

ம1: இப்படி பேச
அவர்கட்கு
உரிமை உண்டு
.......மச்சான்
அதை தடுப்பதற்கு
எனக்கும் உனக்கும்
உரிமை இல்லை
நீ அதை தெரிந்துக்கோ!

ம2: இதுவே தமிழரின்
பண்பாடு
இதில் மறு கருத்துக்கு
இடமே இல்லை
...........மச்சான்.

ம1: இதை சொல்வதில்
எனக்கும் உனக்கும்
ஒரு பெருமை உண்டு.

ம2: எனக்கும்
உனக்கும் இன்று வயலில்
வேலை உண்டு😃
உன் கற்பகம் வந்தால்
வம்பும் உண்டு,
....எழுந்திரு மச்சான்

ம1: கடவுளை யார்
படைத்தான்?
..,........மச்சான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Aug-22, 9:25 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 64

மேலே