முதல் காதல்
முதல் எப்பொழுதும் முழுமுதல்தான்
முழுவதையும் கொட்டிவிடுவதால்....
மீண்டும்
மிக முயன்று
தேடி எடுத்து
அடுத்ததை கட்டமைத்து
அதோடு வாழத் தொடங்குகையில்...
முதலை முகம் காட்டவிடாது
மறைத்து
கடக்க முயலுவோம்...
முந்தானையில் கண்ணீர் முடியப்படும் போதெல்லாம்.....
முதலில் நினைவு வரும்
முதல்......
என்றென்றும் முழுமுதலே..