கண்ணின் கொடைஉன் காதல்விழி மழைப்பொழிவோ

கொண்டலின் கொடையை
..........வான்மழை என்பர்
விண்ணிலவின் கொடையோ
............ஒளியமுதப் பொழிவு
மண்ணின் கொடை நல்
..............வயல்நெல் மணிகள்
கண்ணின் கொடைஉன்
..............காதல்விழி மழைப்பொழிவோ ?
கொண்டல் = மேகம், முகில்
கொண்டல்கள் முழவின் ஏங்க
கம்பனின் சொல்லாடல்
கொண்டலின் --விண்முகிலின்
கொடையை வான்மழை என்பர்
--என்றும் முதலடியை அமைக்கலாம்