கண்களிலே காண்கின்ற காட்சியிலே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் காய் காய் மா)
கண்களிலே காண்கின்ற காட்சியிலே தானே
பெண்களெலாம் மயங்குகின்றார் பேதலித்துத் தானே;
எண்ணுகின்ற எண்ணமெலாம் இன்பமென்றா சொல்வீர்?
உண்மைநிலை அறிந்திட்டால் உத்தமந்தான் என்பேன்!
- வ.க.கன்னியப்பன்