சின்ன சின்ன
சின்ன சின்ன
ஒரு கோப்பை
தேநீர்
அதில் விழுந்து
விட்ட எறும்பு
பதறித்தான் துடிக்கிறது
தான்
சமுத்திரத்தில்
விழுந்து விட்டதாக
எண்ணி
ஒரு சொட்டு
தண்ணீரும்
எறும்புக்கு
பெருங்கடல்
கதவின் கம்பிகள்
அங்கும் இங்கும்
இருப்பது
சிறைக்குள்தான்
கடுகின் வெடிப்பு
சத்தம்
இவர்கள்
கொண்டாடும்
தீபாவளி