அணையில் தடுத்தும் காவிரி ஆற்றில் ஓடும் நீரழகு - ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
சுனையில் நீரும் பெருகிவந்தால்
..சொக்கத் தங்கம் போலழகு!
பனையே றிவாழும் பாட்டாளி
..பகுத்தூண் உண்ணல் பாரழகு!
கணையைத் தொடுத்துக் கட்டழகன்
..காத்து நின்றால் தானழகு!
அணையில் தடுத்தும் காவிரியின்
..ஆற்றில் ஓடும் நீரழகு! 1
சுவைகொள் சொல்லும் பொருளுந்தான்,
..சொல்வேன் தமிழில் மிளிரழகு!
பவழ மல்லி மருக்கொழுந்து
..பருவப் பெண்ணின் எழிலழகு!
அவளின் மார்க ழிக்கோலம்
..அழகோ காலை வாசலழகு!
கவலை யில்லா வாழ்வுக்குக்
..கன்னிப் பெண்ணின் துணையழகு! 2
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
