கண்ணன் தாமோதரன்
கூப்பிடும் தூரத்தில் உள்ளான் நெஞ்சார
கூப்பிட்டுப் பார் ஒருமுறையேனும் அவன் கேட்க
கண்ணிற்கும் தெரிகின்றான் சிந்தித்து ஞானக்
கண்ணால் ஒருமுறையேனும் நோக்க இன்னும்
'அவனையே' சிந்தையில் வைத்து நித்தம்
நீதுதித்தால் உன்னை விட்டு அவன்
போவதெங்கே உன் இதயத்தை விட்டு
அன்று அன்னை யசோதையின் அன்பின்
பிணைப்பால் உரலில் தானே கட்டுண்டு
நின்றான் கட்டுக்கெல்லாம் அடங்கா எங்கள்
கண்ணன் மாயன் தாமோதரன் அவன்
என்றும் பத்தரின் பக்திக்கு மட்டும்
என்றும் கட்டுண்டு கிடப்பவன்