ஆகாயமே நீதான் என் நம்பிக்கை 555
***ஆகாயமே நீதான் என் நம்பிக்கை 555 ***
ஆகாயம்...
எத்தனைமுறை படித்தாலும் புரிவதில்லை
பாவையின் கண்பார்வை...
எத்தனைமுறை உன்னை
நிமிர்ந்து பார்த்தாலும்...
ஒவ்வொரு முறையும் புது புது
அதிசயம் மேகக்கூட்டத்தில்...
பறவைகள், விலங்குகள், மனிதர்களென
பார்க்க பார்க்க அத்தனை பரவசம்...
கடலின் ஆழத்தை
கணக்கிட்ட மனிதர்களால்...
பெண்
மனதின் ஆழத்தையும்...
பூமிக்கும் உனக்கும் இருக்கும்
தூரத்தையும் கணக்கிடமுடியவில்லை...
நீயும் பெண்ணும் ஒன்றோ
பெண்ணின் மறு உருவமா நீ...
தொலைதூரத்தில் கடலை
முத்தமிட்டு கொள்வதுபோல் காட்சி...
அருகில் வந்தால் கணக்கிட
முடியாத தூரத்தில் நீ...
பகலில்
கதிரவனை சூடிக்கொண்டு...
உன் நிறத்தையும்
உயர்ந்திருப்பதையும் ரசிக்க வைக்கிறாய்...
இரவில் நட்சத்திரங்களை அள்ளி
தெளித்து இரவெல்லாம் ஒளிருகிறாய்...
மாலை நேரத்தில் செவ்வானமாய்
நீ கட்சி அளிக்கும் போது...
காதலியை சந்திக்கும் இன்பம்போல
எத்தனை இன்பங்கள் மனதுக்குள்...
தோல்விகள் என்னை
தொடும் போதெல்லாம்...
உன்னை
தலைநிமிர்ந்து பார்ப்பேன்...
நாளை
நான் உயர்ந்தால்...
என்னை ஏளனம் பேசியவர்களும்
என்னை நிமிர்ந்துதானே பார்ப்பார்கள்...
என் நம்பிக்கையின் முதல்
ஆடையாளமே ஆகாயமே நீதான்.....
***முதல்பூ.பெ.மணி.....***