என் இதயமும் ஒரு கருவறைதான் 555
***என் இதயமும் ஒரு கருவறைதான் 555 ***
ப்ரியமானவளே...
காகிதத்தில் காதலை
சொன்னேன் உன்னிடம்...
கண்ணீர் கொடுத்து வாழ்க்கையை
புரியவைத்தாய் என்னிடம்...
பத்து திங்கள் நீ வாழ்ந்தது
ஒரு கருவறைதான்...
உன்னை
கண்ட நாள் முதல்...
என் இதயமென்னும்
கருவறையில் சுமக்கிறேன்...
சுவாசிக்கும்
இறுதி நொடிவரை...
உன்னையும் நம் மழலையையும்
இதய கருவறையில் சுமப்பேன்...
சண்டைபோடுகிறேன்
என்று கோபம் கொள்ளாதே...
என் பெற்றோர்கள்
எனக்கு முக்கியம்தான்...
பெற்றோரைவிட்டு நம்பி கரம்
பிடித்த நீயும் எனக்கு முக்கியம்தான்...
என்னோடு கோபம் கொண்டு
பேசாமல் இருக்கிறாய்...
நிதானமாக நீ யோசித்துப்பார்
உனக்குள் என்காதல் இருக்கும்...
நீ சண்டையிட்டாலும்
நான் சண்டையிட்டாலும்...
நீதான் என்னுடன்
முதலில் பேசவேண்டும்...
நான் பேசினால் உன் கோபம்
அதிகமாகுது மலைகளைப்போல...
நீ முதலில் பேசினால்
மலையான என் கோபம்...
கடலாய் மாறி
உன் பாதம் தழுவுகிறது...
உன் கரம்கோர்த்து
சேர்ந்த நாள் முதல்...
என் இன்பமும்
துன்பமும் நீதானென்று...
உணரப்போவது எப்போது
சொல்லடி என் சகியே.....
***முதல்பூ.பெ.மணி.....***