பார் பட்டணம் பார்

பட்டணம் வந்தேன் தம்பி
சென்னை பட்டணம் வந்தேன்
சொந்த பந்தங்களை மறந்து
சுதந்திரமாய் வாழ்ந்திடவே
பட்டணம் வந்தேன் தம்பி
சென்னை பட்டணம் வந்தேன்...!!

இங்கு மனிதனை
பார்க்கலே தம்பி
மனித இயந்திரங்களை
பார்த்தேன் தம்பி
பொய்யான முகத்துடன்
போலியான வாழ்க்கை
கள்ள மில்லா சிரிப்புக்கும்
காசு கேட்கும் மனிதர்கள்
கடமையை கருத்தில் கொண்டு
கணக்காய் இருக்கும் மனிதர்கள்..!!

பரந்து விரிந்த வங்க கடல் இருந்தும்
கிராமத்து மனிதர்கள் போல்
பரந்த மனமும், மனிதபண்பும்
கூடிய குணத்துடன் வாழ்வோர்
சற்று இங்கு குறைவே...!!

காசு பணம் உள்ளோர்க்கு
பட்டணம் சொர்க்கமடா
கூலிக்கு பாடுபடும்
தொழிலாளிக்கு நரகமடா...!!

கழிவு நீரும் குடி நீரும்
கலந்தே குழாயில் வருமடா
பொதுயுடமை கொள்கைக்கு
இஃது ஓர் உதாரணமடா...!!

பட்டிணத்தில் சுகமாக வாழலாமென்று நம்பி வந்தேன் தம்பி நம்பி வந்தேன்
பட்டணத்தில் வாழ்ந்தது போதுமென்று சொந்தஊருக்கே புறப்பட்டேன் தம்பி
பட்டிணத்தை விட்டே
புறப்பட்டேன் தம்பி....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Nov-22, 5:56 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paar pattanam paar
பார்வை : 168

மேலே